Shanmugan Murugavel / 2026 மார்ச் 16 , பி.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
- வி.ரி. சகாதேவராஜா

காரைதீவு விளையாட்டுக் கழக சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் தம்பிலுவில் எதிரொளி விளையாட்டுக் கழகம் சம்பியனாகி வெற்றிவாகை சூடியது.

காரைதீவு விபுலானந்த மைதானத்தில் சனிக்கிழமை (14) நடைபெற்ற மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 32 கிரிக்கெட் கழகங்கள் பங்குபற்றிய 8 ஓவர்கள் கொண்ட காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் 43 ஆண்டுகள் நிறைவையொட்டி நடாத்தப்பட்ட இத்தொடரின் இறுதிப் போட்டியில் அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டுக் கழகத்தை வென்றே எதிரொளி சம்பியனாகியது.
சம்பியனாகிய எதிரொளிக்கு வெற்றிக் கிண்ணமும் 40 ஆயிரம் ரூபாய் பணப் பரிசும், இரண்டாமிடத்தைப் பெற்ற யங் பிளவர்ஸுக்கு வெற்றிக் கிண்ணமும் 20,000 ரூபாய் பணப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago