2025 மே 15, வியாழக்கிழமை

வென்ற 21 வயதுக்குட்பட்டோருக்கான அணி

Freelancer   / 2023 நவம்பர் 27 , பி.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ஹர் இப்றாஹிம்

சாய்ந்தமருது பிரதேசத்தில் இளையோரை கிரிக்கெட் துறையில் மேம்படுத்தும் வகையில்
சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக் கழகம், கிரிக்கெட் பயிற்சிப் போட்டியொன்றஒ கழக
வீரர்களுக்கிடையில் ஒழுங்குசெய்திருந்தது.

சாய்ந்தமருது பொலிவேரியன் பொது விளையாட்டு மைதானத்தில் 21 வயதுக்குட்பட்ட
இளையோருக்கும், 17 வயதுக்குட்பட்ட இளையோருக்குமிடையில் இப்போட்டி இடம்பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய 21 வயதுக்குட்பட்ட இளையோர் அணி 14 ஒவர்களில் 5
விக்கட்டுக்களை இழந்து 99 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 17 வயதுக்குட்பட்ட இளையோர் அணி 14 ஓவர்களில் 7
விக்கெட்டுகளை இழந்து 63 ஓட்டங்களையே பெற்று 36 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக 21 வயதுக்குட்பட்ட இளையோர் அணி வீரர் அஸ்கத் தெரிவு
செய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .