Shanmugan Murugavel / 2022 ஜனவரி 25 , பி.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.என்.எம். அப்ராஸ்

அம்பாறை மாவட்டத்தில் முன்னணிக் கழகமான சாய்ந்தமருது மியன்டாட் விளையாட்டுக் கழகத்துக்கும் மட்டக்களப்பு மாவட்ட பூனொச்சிமுனை விளையாட்டுக் கழகத்துக்குமிடையே இடம்பெற்ற சிநே பூர்வ கடினபந்து கிரிக்கெட் போட்டியில் மியன்டாட் 6 விக்கெட்டுகளால் வென்றது.
இப்போட்டியானது பூனொச்சிமுனை இக்ரா பாடசாலை விளையாட்டு மைதானத்தில் அண்மையில் இடம்பெற்றது.
20 ஓவர்கள் கொண்ட இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பூனொச்சிமுனை, 4 விக்கெட்டுகளை இழந்து 184 ஒட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், சஜி 50 ஓட்டங்களைப் பெற்றார்.
பதிலுக்கு, 184 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மியன்டாட், 17.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. துடுப்பாட்டத்தில், ஏ.எம். பயாஸ் 87 ஓட்டங்களைப் பெற்றார்.
இப்போட்டியின் நாயகனாக பயாஸ் தெரிவாகியிருந்தார்.
5 hours ago
05 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
05 Mar 2026