Kogilavani / 2021 பெப்ரவரி 17 , பி.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
கண்டி புனித சில்வெஸ்டர்ஸ் கல்லூரிக்கும் கண்டி திருத்துவக் கல்லூரிக்குமிடையே இடம்பெற்ற கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்துள்ளது.
கண்டி அஸ்கிரிய மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் திருத்துவக் கல்லூரி மாணவர்களான அபிசேக் ஆனந்தகுமார் மற்றும் உமரி ரைசன் ஆகியோர் சதங்களைக் குவித்தனர்.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற புனித சில்வெஸ்ட்டர்ஸ் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடியது.
புனித சில்வெஸ்டர்ஸ் கல்லூரி முதல் இனிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய திருத்துவக் கல்லூரி முதல் நாள் ஆட்டமுடிவில் 1 விககெட்டை இழந்து 148 ஓட்டங்களைப் பெற்றது.
இரண்டாவது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த திருத்துவக் கல்லூரி, மொத்தம் 501 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
இதில் அபிசேக் ஆனந்தகுமார் மற்றும் உமரி ரைசன் ஆகியோர் சதங்களைக் குவித்தனர்.
அபிசேக் ஆனந்தகுமார் 146 ஓட்டங்களையும், உமரி ரைசன் 139 ஓட்டங்களையும் பவன் பத்திராஜ 75 ஓட்டங்களையும் பெற்றனர். எஸ் அகில 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
இரண்டாவது இனிங்சைத் தொடர்ந்த புனித சில்வெஸ்டர்ஸ் கல்லூரி, ஆட்ட முடிவின்போது 55 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டை இழந்திருந்தது.
போதிய நேரம் இன்மையால் போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .