Shanmugan Murugavel / 2026 மே 07 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செ.தி. பெருமாள்

ஹட்டன் பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கிடையிலான வலய மட்ட விளையாட்டுப் போட்டிகள் ஹட்டன் டன்பார் மைதானத்தில் நடைபெற்று வந்ததைத் தொடர்ந்து, ஏனைய போட்டிகள் அம்பகமுவ மைதானத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் போட்டிகளில் கலந்து கொள்ள சென்ற மாணவர்கள் மைதானத்தில் அடிப்படை வசதியின்றி பாரிய சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.
கினிகத்தேன அம்பகமுவ சிங்கள பாடசாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கழிவறை வசதிகளோ குடிநீர் வசதிகளோ இல்லாத நிலையில் இவ்வாறான போட்டிகளை நடத்துகின்றமையால் மாணவர்களும் ஆசிரியர்களும் பாரிய அளவிலான அசெளகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
அடிப்படை வசதிகள் இல்லாத விளையாட்டு மைதானத்தில் வலய மட்ட விளையாட்டு போட்டிகள் நடத்துவது சம்பந்தமாக ஹட்டன் கல்வி வலய அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தும் படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago