Janu / 2024 மார்ச் 05 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் - நுரைச்சோலை , இளந்தையடி கடற்பிரதேசத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருதொகை பீடி இலைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (03) இடம்பெற்றுள்ளது .
நுரைச்சோலை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் .
கடலோர பாதுகாப்பு கடற்படையினரால் இளந்தையடி கடற்பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 111 பார்சல்களை சோதனை செய்த போதே , அதிலிருந்து 3,440 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளது .
இவ்வாறு கடற்படையினரால் மீட்கப்பட்ட பீடி இலைகள் அடங்கிய பார்சல்களும் , கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க அலுவலகத்திடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
ரஸீன் ரஸ்மின்

7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago