Mayu / 2024 பெப்ரவரி 20 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
புத்தளம், கற்பிட்டி பத்தலங்குண்டு கடற்பிரதேசத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருதொகை பீடி இலைகள் கடற்படையினரால் திங்கட்கிழமை (19) கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் சந்தேகத்தின் பெயரில் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் 32 - 37 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
வடமேற்கு கடற்படை கட்டளையின் கடலோர பாதுகாப்பு கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த பீடி இலைகள் கைப்பற்றுள்ளன.

பத்தலங்குண்டு கடற்பிரதேசத்தில் சந்தேகத்திடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிங்கி இயந்திர படகு ஒன்றினை கடற்படையினர் சோதனை செய்துள்ளனர்.
இதன்போது, 42 உர மூடைகளில் அடைக்கப்பட்ட 1471 கிலோ கிராம் பீடி இலைகள் இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago