Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 ஜூலை 11 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் முந்தல் - பள்ளிவாசல்பாடு கடற்பிரதேசத்தில் இருந்து ஒரு தொகை மஞ்சள் புதன்கிழமை (10) மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
வடமேற்கு கடற்படை கட்டளையின் புத்தளம் தம்பபண்ணி கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினர் குறித்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கடலில் இருந்து கரையை வந்தடைந்த டிங்கி இயந்திர படகு ஒன்றை பரிசோதனை செய்தனர்.
இதன்போது, குறித்த டிங்கி இயந்திர படகில் 44 உர மூடைகளில் அடைக்கப்பட்ட 1373 கிலோ 700 கிராம் மஞ்சள் இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த டிங்கி இயந்திர படகில் பயணித்த கற்பிட்டி பகுதியைச் இருவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் , மீட்கப்பட்ட மஞ்சள் மற்றும் டிங்கி இயந்திர படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.
ரஸீன் ரஸ்மின்
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago