Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
J.A. George / 2023 டிசெம்பர் 20 , மு.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹெவ்லொக் நகரில் அமைந்துள்ள Conte பாலர் பாடசாலையானது, அண்மையில் தனது மாணவர்களுக்கான வருடாந்த கலை நிகழ்வு மற்றும் பட்டமளிப்பு நிகழ்வினை நடத்தியது.
கொழும்பு 5இல் உள்ள பௌத்த கலாசார நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இளம் மாணவர்கள் தமது திறமைகளை நடனம் மற்றும் நாடக கலைகள் ஊடாக வெளிப்படுத்தினர்.
நாடகம் மற்றும் மொழி கலை அகாடமியை சேர்ந்த ஜுமானா லுக்மான்ஜீ, இந்த நிகழ்வுக்காக மாணவர்களை தயார்ப்படுத்தி இருந்தார்.
இளம் திறமைகளை வளர்ப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் ஜுமானாவின் பேச்சு மற்றும் நாடக கலை மாணவர்கள், Conte பாலர் பாடசாலை மாணவர்களுடன் இணைந்து மேடையில் தங்கள் திறமைகளையும் படைப்பாற்றலையும் நம்பிக்கையுடன் வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்வின்போது, Conte முன்பள்ளியைச் சேர்ந்த ரிதிமாலியத்த மற்றும் அவரது குழுவினர் தங்கள் பாலர் பாடசாலைகளுக்கான வருடாந்த நிகழ்வினையும் ஏற்பாடு செய்திருந்தனர்.
லுக்மான்ஜியின் அகாடமியைச் சேர்ந்த இளம் நடிகர்களும், கான்டே முன்பள்ளி மாணவர்களும் பங்கேற்ற, வருடாந்த சிறுவர் நாடகத் தயாரிப்பானது அன்றைய நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரின் மனதையும் மயங்கச் செய்தது.
கடந்த 13 வருடங்களாக Conte பாலர் பாடசாலையானது தமது சிறப்பான கற்றல் முறைகளின் ஊடாக சிறந்த மாணவர்களை உருவாக்கி வருகின்றது.
ஜுமானா லுக்மான்ஜி, நாடகம் மற்றும் பேச்சில் தங்கப் பதக்கம் வென்றவர். நாடகக் கலைகள் / இலக்கியம் மற்றும் மொழிக் கலைகளில் தீவிர ஆர்வமுள்ளவர்.
இந்த நிகழ்வானது அவரது பேச்சு மற்றும் நாடக மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தவும், தன்னம்பிக்கையை வளர்க்கவும், படைப்பாற்றலைத் தூண்டவும், மேலும் அவரது வழிகாட்டுதலின் கீழ் இளம் நடிகர்கள் வளரக்கூடிய ஒரு மேடையாகவும் செயல்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
42 minute ago
50 minute ago
2 hours ago