2025 ஜூலை 16, புதன்கிழமை

MMCA அருங்காட்சியக நிபுணர் குழுவினர்

Janu   / 2025 ஜூலை 15 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அருங்காட்சியகத்தின் இளைய நிபுணர்களுக்கு புதிய கற்றல் முறைகளை அறிமுகம் செய்து பயிற்சியளிப்பது நவீன மற்றும் சமகாலக் கலைக்கான இலங்கை அருங்காட்சியகத்தின் (MMCA இலங்கை) பிரதான பணியாக அமைகிறது. கற்றுக் கொண்டிருக்கும் போதும் முன்னரும் பின்னரும் என மாணவர்கள் கலைகள், கலாச்சாரம், பாரம்பரியம் மூலம் பெறக் கூடிய வேலை வாய்ப்புகளை  ஆராய அவர்களை ஊக்குவிப்பதில் அருங்காட்சியகம் முழு மூச்சுடன் செயற்படுகிறது. இதன் மூலம் இலங்கையில் கலைகள் மற்றும் கலாச்சாரம் குறித்த திறனைக் கட்டியெழுப்புவதற்கு உதவி நல்கலாம் என்பது MMCA இலங்கையின் நோக்கம் ஆகும்.

இப்பயிற்சி மற்றும் கற்றல் முயற்சிகள் தொடர்பாக MMCA இலங்கை முன்னெடுத்த அணுகு முறையிலே அருங்காட்சியகத்தின் வருகை கல்வியாளர்கள் (VE) நிகழ்ச்சித் திட்டமும் உள்ளடங்குகிறது. பிரதானமாக அருங்காட்சியத்தினைச் சூழ முன்னெடுக்கப்பட்ட இவ் வருகை கல்வியாளர் நிகழ்ச்சித் திட்டத்திலே பார்வையாளர் ஈடுபாடு, கலைப்படைப்பின் பாதுகாப்பு, பொது நிகழ்ச்சித் திட்டங்கள் செவ்வனே தடையின்றி நடப்பதற்கு ஆதரவாக இருத்தல் போன்ற பரந்துபட்ட பணிகள் உள்ளடங்கின. 2023 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரை MMCA இலங்கையில் வருகை கல்வியாளராக பணியாற்றிய மினெலி கருணாரத்ன 2023 ஒக்டோபர் மாதம் முதல் 2024 ஓகஸ்ட் மாதம் வரை அருங்காட்சியக்குழுவில் கல்வி ஒருங்கிணைப்பாளராக இணைந்து கொண்டார். அவரது அனுபவமும் பயிற்சியும் புதிய பணியினை மெருகேற்றிய வேளையில், கலை வரலாற்றிலே அவரது ஆர்வம் அதிகரிக்க இங்கிலாந்தின் எசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் கலை வரலாற்றில் இளமாணிப்பட்டப்படிப்பை மேற்கொள்ள முடிவு செய்தார்.

அவரது கற்றல் நெறியின் விடயதானமானது கட்புலக் கலாச்சார வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. தற்காலத்தில் உலகளாவும் உருவாக்கப்படும் புதிய வடிவகலைகள் மீதான தனது ஆர்வத்திற்கு அது தீனியிடுவதாக அவர் கருதுகிறார். “இவற்றை எப்படிக் கையாள்வதிலும் அவை இயங்கும் முறைபற்றி தெரிந்து கொள்வதிலும் MMCA இலங்கையில் நான் பெற்றுக்கொண்ட பயிற்சி பெரிதும் உதவியுள்ளது,” எனத் தெரிவித்தார் கருணாரத்ன. இந்த இடங்களுக்குச் செல்வதனாலும் இங்கிலாந்தின் பல இடங்களிலிருந்தும் துறைசார் வல்லுநர்களைக் கொணர்ந்து பல்கலைக்கழகம் வழங்கும் வாராந்த விசேட விரிவுரைகள் மூலமும் தனக்கு நல் அனுபவங்கள் கிடைப்பதாகவும் அதனைத் தான் மீள இலங்கைக்கு வந்ததன் பிற்பாடு கலை மற்றும் கலாச்சாரத் துறைக்காகப் பகிர்ந்து கொள்வார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பரந்துபட்ட கல்வி மற்றும் பயிற்சி பின்னணிகளை கொண்ட இளம் நிபுணர்கள் அருங்காட்சியக துறையில் இணைந்து கொள்ளும் வகையில் MMCA இலங்கை முன்னெடுக்கும் முயற்சிகளின் இன்னோர் உதாரணம் உதவி எடுத்தாளுனர் தினால்சஜீவ. அருங்காட்சியகத்தின் தற்போதைய கண்காட்சியான ‘முழு நில அமைப்பு’ கண்காட்சியின் எடுத்தாளுனர் ஒருவராக இருக்கும் சஜீவவிற்கு, இக் கண்காட்சி சவாலானது தான் எனினும் மிக்க கௌரவத்தையும் ஈட்டித் தருவதாகவும் அமைந்தது. இவர் இங்கிலாந்தின் பல் மௌத் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கொழும்பில் சேவையாற்றும் AMDT School of Creativity ல்க்ரஃ பிக் வடிவமைப்பு இளமாணிப்பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறார். கலை வரலாறு, அச்சுக்கலை, பெயர்ப் பிரபலமாக்கல் என்பவை உட்படப் பல்தளங்களில் கட்புலத் தொடர்பாடலை ஆராய்வதாக அவரது கற்கைநெறி அமைவதால் முறையான க்ரஃபிக்கற்றலானது தனது எடுத்தாளுனர் பணிக்கு மிக்க உதவியாக அமையும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார் சஜீவ. இவை அனைத்து மேகண்காட்சி உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பவை.

“தொழில் ரீதியாக நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்கு உணர்த்துவதில் அருங்காட்சியகம் பிரதான பங்காற்றியுள்ளது,” எனத் தெரிவிக்கும் சஜீவ, “பட்டப்படிப்பின் பின்னர் முதுகலையும் கற்கவுள்ளேன். நவீன மற்றும் சமகாலக் கலைகளுடன் பார்வையாளர்களின் ஈடுபாட்டை மேம்படுத்துவதில் எடுத்தாளுநராகத் தொடர்ந்து பணியாற்றுவேன்,” என மேலும் குறிப்பிட்டார். இவர் 2024 ம் ஆண்டு ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உலக இலக்கியத்தில் முதுகலை மாணிப்பட்டத்தைப் பெற்றுள்ளார். “இம் முதுகலை கற்கைத்திட்டத்திலே புத்தக வரலாறு, புத்தகக் காப்பகக் கோட்பாடு மற்றும் கையெழுத்துப் பிரதிகள் என்பவை உள்ளடங்கின. அருங்காட்சியகம் மற்றும் பாரம்பரியம் குறித்த பல்மட்ட எனது ஆய்வு ஆர்வத்திற்குத் தீனியிடுவதாக இது அமைந்தது,” என ஹரிஸ் குறிப்பிட்டார்.

2024 ம் ஆண்டு பட்டப்படிப்பை நிறைவு செய்து காப்பகவாளராக MMCA இலங்கையில் இணைந்த பின்னர் மற்றோருடன் பணியில் இணைந்து மினெட்டி சில்வா குறித்த காப்பகப் பணியில் ஈடுபடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அவரை எடுத்தாளுநர் குழுவில் பணியில் கொண்டு அருங்காட்சியகமானது மென் மேலும் மனித நேயப்பண்புகளை அடிப்படையாகக் கொண்ட எடுத்தாளுநப் பணியினை மேம்படுத்திக் கொள்வதுடன் MMCA இலங்கையின் பணியிலக்கை நோக்கிய ஆய்வின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்ட பயணத்தைத் தொடர்கிறது.

கல்வி, பயிற்சி, நிபுணத்துவ எதிர்பார்ப்புகளை உணர்ந்துகொண்டவர்களாக இலங்கையில் கலை மற்றும் கலாச்சாரத் துறைகளில் இளம் அருங்காட்சியக நிபுணர்களை உருவாக்கி, மேம்படுத்தும் தமது பணியிலே தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறது MMCA இலங்கை. அருங்காட்சியகம், அதன் கண்காட்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்களை அவர்களின் இணையதளமான www.mmca-srilanka.org இல் அல்லது முகநூலில் facebook.com / mmcasrilanka மற்றும் இன்ஸ்டகிராமில் instagram.com / mmcasrilanka/ பார்த்து அறியலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .