இலங்கை ஊடகவியலாளர் சம்மேளனத்தின் (SLPA) 70ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் கடந்த கொழும்பிலுள்ள ரஷ்ய கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் ஜனவரி 31ஆம் திகதி நடைபெற்றது. இதன்போது 2026/2027ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
1955ஆம் ஆண்டு ஒக்டோபர் 9ஆம் திகதி வணக்கத்திற்குரிய உடகெந்தவல சிறி சரணங்கர தேரரினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த சம்மேளனம், கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் திகதி தனது 70ஆவது ஆண்டு நிறைவு மாநாட்டையும், டி.எஃப்.காரியகரவன நினைவு ஊடக விருது வழங்கல் நிகழ்வையும் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் வெகுவிமரிசையாகக் கொண்டாடியிருந்தது.
புதிய நிர்வாகிகள் விபரம்:
• பிரதம காப்பாளர்: முதித காரியகரவன
• காப்பாளர்: பி.பாலசிங்கம்
• தலைவர்: குருலு கூஜன காரியகரவன (டெய்லி மிரர்)
• சிரேஷ்ட உப தலைவர்: பி.எம்.சேனாரத்ன
• உப தலைவர்கள்: விஜித கதிரகொன்ன, திலக் சேனநாயக்க, டக்ளஸ் நாணயக்கார, ஷெர்லி அனில் டி சில்வா
• பொதுச் செயலாளர்: தாரக்க விக்ரமசேகர (சிலுமின)
• பிரதிப் பொதுச் செயலாளர்: சமன் இந்திரஜித் (தி ஐலண்ட்)
• தேசியச் செயலாளர்: ஷஷி பிரபாத் ரணசிங்க (லங்காதீப)
• பொருளாளர்: சாமிந்த கருணாரத்ன
ஆசிரியர் குழு:
• சிங்கள மொழி ஆசிரியர்: யசஸ் நைனாயக்க
• தமிழ் மொழி ஆசிரியர்: அழகன் கனகராஜ் (தமிழ் மிரர்)
• ஆங்கில மொழி ஆசிரியர்: யோஹான் பெரேரா (டெய்லி மிரர்)
• புகைப்பட ஆசிரியர்: சமந்த பெரேரா (டெய்லி மிரர்)
ஏனைய முக்கிய பொறுப்புகள்:
• தேசிய அமைப்பாளர்: இஷு பண்டார
• சட்ட ஆலோசகர்: சட்டத்தரணி லக்மல் சூரியகொட
• டிஜிட்டல் ஊடகச் செயலாளர்: துஷாந்த குணரத்ன
• பெண்கள் விவகாரச் செயலாளர்: நிதர்ஷனி விக்ரமசிங்க
செயற்குழு உறுப்பினர்கள்: சமிந்த பெரேரா, கெலும் பண்டார, ககனி வீரகோன், ஆனந்தி பாலசிங்கம், செந்தில் வேலவர், ரம்சி குத்தூஸ் உள்ளிட்ட 20 பேர் செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.