Janu / 2024 மே 09 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் நான்கு கோடி ரூபாய் பெறுமதியான தங்க ஜெல் உடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த நபர் ஒருவர் சுங்க, போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் வியாழக்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளார் .
கைது செய்யப்பட்ட நபர் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடையவர் எனவும், அவர் பல்வேறு பொருட்களை விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு வந்து விற்பனை செய்யும் வர்த்தகர் எனவும் தெரியவந்துள்ளது .
குறித்த நபரை சோதனைக்கு உட்படுத்திய போது அவரது உள்ளாடைக்குள் மற்றும் காலணிகளில் மறைத்து வைத்திருந்த நிலையில் 1 கிலோ 975 கிராம் நிறையுடைய தங்க ஜெல் அடங்கிய 03 பார்சல்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

16 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
32 minute ago