2026 மார்ச் 16, திங்கட்கிழமை

கடத்தலில் ஈடுபட்ட கான்ஸ்டபிள்கள் கைது

Mayu   / 2024 ஓகஸ்ட் 12 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

16 வயது சிறுவனை காரில் கடத்திச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட பணியகத்தில் ஹோமாகம பிரிவில் கடமையாற்றும் ஒருவரும் மீகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு கான்ஸ்டபிள்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எம்பிலிபிட்டிய பல்லேகம பகுதியில் உள்ள வீடொன்றில் வசிக்கும் 16 வயதுடைய சிறுவனொருவன் காரில் கடத்தப்படுவதாக எம்பிலிப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் காரை தனியார் வங்கிக்கு முன்பாக பொலிஸார் காரை நிறுத்தி கான்ஸ்டபிள்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் 29 மற்றும் 31 வயதுக்கு இடைப்பட்ட பரகடுவ மென்னார பிட்டிய மற்றும் பட்பேரிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது,


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X