Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Mithuna / 2023 நவம்பர் 29 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
புத்தளம் - மஹகும்புக்கடவல பகுதியில் உள்ள மோகரிய குளத்திலிருந்து மீனவரான மஹகும்புக்கடவலையைச் சேர்ந்த திருமணமாகாத 51 வயதான தசாநாயக்க முதியன்சேலாகே சுனில் செவ்வாய்க்கிழமை (28) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குளத்தில் வலையைக் கட்டி, மீன் பிடிக்கும் தொழிலை இடைக்கிடையே மேற்கொண்டு வரும் இவர், திங்கட்கிழமை (27) வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். செவ்வாய்க்கிழமை (28) இரவு சடலமாக மீட்கப்பட்டார்.
மோகரிய குளத்தில் சடலமொன்று மிதப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
சடலத்தின் முகப் பகுதி சிதைவடைந்த நிலையில் காணப்படுவதாகவும், கபரகொயா எனும் நீர் உடும்பு (Asian water monitor ) குறித்த மீனவரின் முகப் பகுதியை சாப்பிட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
3 hours ago
7 hours ago