Mayu / 2024 மார்ச் 04 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
தம்புள்ளை ஹபரணை பிரதான வீதியின் பல்வெஹர பகுதியில் இன்று (04) காலை பஸ்ஸொன்றும் காரொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தாய், தந்தை மற்றும் ஆண் குழந்தையொன்றும் காரின் சாரதி உட்பட பஸ்ஸில் பயணித்த பிக்குணியொருவரும் காயமடைந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும், தம்புள்ளையில் இருந்து சீகிரியா நோக்கி பயணித்த வெளிநாட்டவர்களை ஏற்றிச் சென்ற காரும் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், விபத்து காரணமாக, பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், விபத்துக்குள்ளான கார் அருகில் இருந்த சிறிய கடையின் மீதும் மோதியதில் பலத்த சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago