Princiya Dixci / 2021 ஓகஸ்ட் 23 , பி.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
புத்தளம், கருவலகஸ்வவ, எரம்புதுகஸ்வெல பகுதியிலுள்ள குழிக்குள் வீழ்ந்த, பிறந்து மூன்று மாதங்களேயான யானைக் குட்டி, நேற்று (22) பாதுகாப்பாக மீட்டுள்ளதாக கருவலகஸ்வெவ வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த யானைக் குட்டி குழிக்குள் வீழ்ந்து மூன்று நாள்களாக வெளியே வராமல் உள்ளேயே கிடந்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
தப்போவ சரணாலயத்துக்கு அருகிலுள்ள எரம்புதுகஸ்வெல பகுதியில் உள்ள பாரிய பாறை கற்குழி ஒன்றுக்குள் சிறிய யானைக் குட்டி வீழ்ந்து கிடப்பதாக, அப்பகுதியில் கால்நடைகளை மேய்க்கச் சென்ற நபர் ஒருவர் கருவலகஸ்வெவ வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளார்.
தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற கருவலகஸவௌ வனவிலங்கு அலுவலக அதிகாரிகள், யானைக் குட்டியை பாதுகாப்பாக மீட்டு, கருவலகஸ்வெவ வனவிலங்கு அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.
இவ்வாறு பாதுகாப்பாக மீட்கப்பட்ட யானைக் குட்டியை பரிசோதனை மற்றும் சிகிச்சை என்பவற்றுக்காக அநுராதபுரம் பன்டுலகம வனவிலங்கு அலுவலகத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாக கருவலகஸ்வெவ வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
46 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago
4 hours ago