Mayu / 2024 மார்ச் 25 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் இருந்து தம்புத்தேகம ஊடாக அனுராதபுரம் நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸில் பயணிகளிடம் திருடிய மூன்று பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்களிடமிருந்து ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண்கள் தம்புத்தேகம குடாகம மற்றும் புலத்சிங்கள வீதி இங்கிரிய பிரதேசங்களில் வசிக்கும் 20, 23 மற்றும் 30 வயதுடைய இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் உட்பட மூன்று பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவர் தனது நகையை காணவில்லையென தெரிவித்ததையடுத்து, பஸ்ஸை அனுராதபுரம் பொலிஸ் தலைமையகத்திற்கு கொண்டு சென்று சோதனையிட்ட போது சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் இந்த பெண்கள் உள்ளிட்ட பெண்கள் கும்பல், நாடளாவிய ரீதியில் பல திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago