Mayu / 2024 பெப்ரவரி 26 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு - கண்டி நெடுஞ்சாலையில் தங்கோவிட்ட ஹலகலைக்கு அருகில் அரிசி ஏற்றிச் சென்ற கொள்கலன் லொறியொன்று இன்று (26) காலை வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும், குறித்த வீதியின் போக்குவரத்து மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக தடைப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிதிரிகிரியில் இருந்து களுத்துறைக்கு அரிசி ஏற்றிச் சென்ற போது சாரதியின் கவனக்குறைவால் விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் காயமடைந்த உதவியாளர் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தங்கொவிட்ட பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.

7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago