Editorial / 2026 மார்ச் 13 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கல்லூரியின் பழைய மாணவர்களால் நிர்மாணிக்கப்பட்ட நவீன நாட்டியப் பயிற்சி கலையரங்கம் அண்மையில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
கல்லூரியின் 'விவேகன்ஸ் 87/88 சாதாரண தரம்' மற்றும் '90/91 உயர்தர' முன்னாள் மாணவர்களின் நிதிப் பங்களிப்பு மற்றும் முழுமையான மேற்பார்வையில் இக்கலையரங்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
"கல்வி ஒளி பரப்பி, கலை வளர்த்து, மரபை மகிமைப்படுத்துவோம்" எனும் உயரிய நோக்கோடும், பாடசாலையின் கலைப் பாரம்பரியத்தைப் பேணிப் பாதுகாக்கும் முகமாகவும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. தற்போது கல்வி பயிலும் மாணவர்களின் கலைத்திறன்களை மேம்படுத்துவதற்காக இக்கலையரங்கம் பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.
கல்லூரி அதிபர் திரு. மூ. மூவேந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தத் திறப்பு விழாவில், கல்லூரியின் முன்னாள் அதிபர் திருமதி எஸ். பாலசுந்தரம் கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டார். மேலும், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், கலையரங்க நிர்மாணத்திற்குப் பங்களிப்பு செய்த முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எனப் பலரும் இதில் பங்கேற்றனர்.
பாடசாலை தனது 100-வது ஆண்டில் கால்பதிக்கும் இத்தருணத்தில், பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து வழங்கிய இந்த அன்பளிப்பு மாணவர்களிடையேயும் ஆசிரியர்களிடையேயும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







7 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
8 hours ago