Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Janu / 2024 மார்ச் 11 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹலாவத்தை - திகன்வெவ பிரதேசத்தில் வீதிக்கு அருகில் உழவு இயந்திரத்திற்கு எரிபொருளை ஏற்றிக்கொண்டிருந்த இளைஞன் ஒருவர் மீது தென்னை நெல் நாற்றுகளை ஏற்றிச் சென்ற பாரிய டிப்பர் ஒன்று மோதி இளைஞன் இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை (11) இடம்பெற்றுள்ளது .
ஹலாவத்தை , திகன்வெவ, மொரக்கலே பகுதியைச் சேர்ந்த ஜனிது தனஞ்சய என்ற 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் சிறிய பேக்ஹோ இயந்திரமொன்றை தனது தந்தையின் உழவு இயந்திரத்தில் ஏற்றிச் சென்றுக்கொண்டிருந்த போது , உழவு இயந்திரத்தில் எரிபொருள் தீர்ந்துள்ளதுடன் எரிபொருளை எடுத்து உழவு இயந்திரத்தில் ஏற்றிக் கொண்டிருந்த போது, அதிவேகமாக வந்த டிப்பர் வாகனம் திடீரென வீதியை விட்டு விலகி இளைஞன் மீது கவீழ்ந்துள்ளது
விபத்தில் இளைஞன் தூக்கி வீசப்பட்டு சிறிய பள்ளத்தில் விழுந்துள்ளதாகவும் , டிப்பரின் முன் சக்கரங்கள் இளைஞனின் மார்பில் சிக்கி இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
18 minute ago
34 minute ago
36 minute ago