Mayu / 2024 பெப்ரவரி 21 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹல்துமுல்ல உள்ளூராட்சி சபையின் உழவு இயந்திரத்தில் டீசல் திருடிய குற்றச்சாட்டின் பேரில் உள்ளுராட்சி சபையின் ஊழியர்கள் மூவர் இன்று (21) கைது செய்யப்பட்டதாக ஹல்துமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
ஹல்துமுல்லை பிரதேச சபையின் செயலாளர் உபுல் யாப்பா ஹல்துமுல்ல பொலிஸில் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உள்ளூராட்சி மன்ற வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொலிஸார், துப்புரவு பணியாளர், காவலாளி மற்றும் சபையில் பணிபுரியும் மற்றுமொரு ஊழியர் ஆகியோரை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
16 Mar 2026
16 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Mar 2026
16 Mar 2026