2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

துபாய் தரங்கவின் சகா சிக்கினார்

Janu   / 2024 மே 27 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் , ஐந்து கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் 37 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற  இரகசியத் தகவலுக்கமைய ,பாணந்துறை வலப்போல பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே  சந்தேக நபர்  கைது செய்யப்பட்டதாகவும் அவரிடமிருந்து சுமார் 2 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபர் , துபாயில்  பதுங்கி இருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும்  துபாய் தரங்க என்பவரின் சகா என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

மேலும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X