Janu / 2024 ஜூன் 03 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாரவில - தல்வில பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் மீது பாரிய மரமொன்று வீழ்ந்ததில், தேவாலயத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (2) இடம்பெற்றுள்ளது .
பலத்த காற்று காரணமாக, இவ்வாறு கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகில் இருந்த பெரிய மரம் சரிந்து தேவாலயம் மீது வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அந்த தேவாலயத்தின் ஒரு பகுதி கட்டிடம் மற்றும் கூரை என்பனவற்றுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனினும் சம்பவம் இடம்பெற்ற போது, தேவாலயத்திற்குள் எவரும் இருக்கவில்லை என புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தேவாலயத்தின் மீது வீழ்ந்த மரத்தின் கிளைகளையும், சேதமடைந்த கட்டிடங்களையும் அப்பகுதி மக்கள் அகற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
ரஸீன் ரஸ்மின்

14 minute ago
27 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
27 minute ago
2 hours ago