2024 மே 09, வியாழக்கிழமை

பீடி இலைகளுடன் பூச்சி கொல்லி மருந்துகள் மீட்பு

Janu   / 2024 பெப்ரவரி 14 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் - சின்னப்பாடு கடற் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒருதொகை பீடி இலைகள் மற்றும் போத்தலில் அடைக்கப்பட்ட பூச்சி கொல்லி மருந்துகள் என்பன மீட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் புதன்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமேற்கு கடற்படை கட்டளையின் கடலோர பாதுகாப்பு கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின்போது  சின்னப்பாடு கடற் பிரதேசத்தில் சந்தேகத்திடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு டிங்கி இயந்திர படகுகளை சோதனையிட்டதில் 41 உர மூடைகளில் அடைக்கப்பட்ட 1,177 கிலோ கிராம் பீடி இலைகள் மற்றும் 150 போத்தல் பூச்சி கொல்லி மருந்துகள் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வரும் 21 வயது தொடர் 45 வயதுடைய கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த  நால்வரும்,  கைப்பற்றப்பட்ட பீடி இலைகள்,  பூச்சி கொல்லி மருந்துகள் என்பனையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க அலுவலகத்திடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடத்தலுக்கு பயன்படுத்திய  இரண்டு டிங்கி இயந்திர படகுகளை மேலதிக நடவடிக்கைகளுக்காக தமது பொறுப்பில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

ரஸீன் ரஸ்மின்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X