Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Janu / 2024 ஜனவரி 22 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிரிவத்துடுவ பிரதேசத்தில் வீடொன்றுக்கு முன்பாக புதையல் தோண்டிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட நால்வர் கஹதுடுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
புதையல் தோண்டுவதாகக் குற்றப்புலனாய்வு பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில் குறித்த நால்வரைக் கைது செய்யப்பட்டதாகவும் கைது செய்யப்பட்டவர்களில் இளம் தம்பதிகள், பெண்ணின் சகோதரர், மற்றுமொரு நபரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின்போது, கிணறு தோண்டப்போவதாக அவர்கள் பொலிஸாரிடம் கூறியதாகவும் புதையல் தோண்டிய இடத்தில் 8 அடி ஆழமும், 6 அடி அகலமும் தோண்டப்பட்டிருந்ததாகவும், தண்ணீர் மோட்டார், மண்வெட்டிகள், இரும்பு கத்திகள் போன்ற பல உபகரணங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களை கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
8 hours ago