Janu / 2024 மார்ச் 05 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
கற்பிட்டி, உச்சமுனை கடற்பகுதி ஊடாக சட்டவிரோதமாக கொண்டு செல்ல முயற்சித்த பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் சந்தேகநபர்கள் இருவர், கடற்படையினரால் ஞாயிற்றுக்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கற்பிட்டி வன்னிமுந்தல் பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 44 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் .
வடமேற்கு கடற்படை கட்டளையின் , கடலோர பாதுகாப்பு கடற்படையினரால் கற்பிட்டி உச்சமுனை கடற்பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு டிங்கி இயந்திர படகுகளை சோதனை செய்த போதே இவ்வாறு 100 மில்லி லீட்டர் அளவுடைய 4 000 பூச்சிக்கொல்லி மருந்து போத்தல்கள்ளும், 10 கிராமுடைய 6534 பூச்சிக்கொல்லி பக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இரண்டு டிங்கி இயந்திர படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன .
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பூச்சி கொல்லி மருந்து போத்தல்களும், பக்கட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க அலுவலகத்திடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
ரஸீன் ரஸ்மின்



7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago