2024 மே 09, வியாழக்கிழமை

பூட்டை உடைத்த தேரர்கள் இருவர் கைது

Mayu   / 2024 பெப்ரவரி 14 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல கோடி ரூபாய் பெறுமதியான, பம்பலப்பிட்டிஃபரிட் பிளேஸில் உள்ள பழைய இரண்டுமாடிகளைக் கொண்ட வீட்​டுக்கு போடப்பட்டிருந்த பூட்டை உடைத்துக்கொண்டு, சட்டவிரோதமான முறையில், உள்நுழைந்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், பௌத்த தேரர்கள் இருவரை கைது செய்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். 

மாலபே பிரதேசத்தில் உள்ள விஹாரையைச் சேர்ந்த தேரர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்னர். 

தன்னுடைய வீட்டின் பூட்டை உடைத்துக்கொண்டு, தேரர்கள் இருவர் மற்றும் மற்றொரு நபர், வீட்டுக்குள் பலவந்தமாக தங்கியிருப்பதாக, அந்த வீட்டின் உரிமையாளர் எனக் கூறப்படும் பெண், பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, ஸ்தலத்துக்கு விஜயம் செய்த பொலிஸ் குழு, அப்போது வீட்டிலிருந்த 20 மற்றும் 14 வயதுகளுடைய பௌத்த தேரர்கள் இருவரை கைது செய்தனர். 

இந்த வீடு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரியான மூவருக்கு உரித்துடையது. உரிமையாளர் வெளி​நாட்டுக்கு சென்றிருக்கும் நிலையில், அற்றோனி தத்துவத்தின் பிரகாரம், வீட்​டின் ஒருபகுதியை கொடுத்துள்ளதாகவும் அதனால், வீட்டின் உரிமையாளரின் வீட்டுக்குள் நுழைத்துள்ளதாக விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X