2025 ஜூலை 19, சனிக்கிழமை

பூனைப்பிட்டியில் கரையொதுங்கிய சடலம்

Mayu   / 2024 ஜூலை 03 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் - உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூனைப்பிட்டி கடற்கரையோரத்தில் பெண் ஒருவரின் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக கரையொதுங்கிய பெண் 40 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்ணின் சடலம் உருக்குலையாமல், சிறுநீரக பட்டை (urinepipe) பொருத்தப்பட்ட நிலையில் ,பெண் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவராக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் ஏ.எம்.வசீம் ராஜா, சடலத்தை பார்வையிட்டு நீதிவான் விசாரணையை அடுத்து, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு கரையொதுங்கிய குறித்த பெண்ணின் சடலம் யாருடையது என்பது தொடர்பில் உடப்பு பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X