Janu / 2026 பெப்ரவரி 04 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் கட்டிடக்கலை பீடத்தில் 4 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 59,000 ரூபாய் பணத்துடன் கைது செய்யப்பட்டதாக மொரட்டுவ தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவரிடம் போதைப்பொருள் இருப்பதாக பல்கலைக்கழக பாதுகாப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து, பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் குழுவினர் சந்தேகநபரான மாணவனை சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.
இதன்போது, அவரிடமிருந்து 24 கிராம் 50 மில்லி கிராம் கஞ்சா, 11 கிராம் 330 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 05 கிராம் 22 மில்லிகிராம் ஹேஷ், 2 போதை குளிசைகள் மற்றும் 15 போதை முத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago