Janu / 2025 ஜூன் 01 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கற்பிட்டி முகத்துவார கிராம மக்களின் நீண்ட கால தேவையாக காணப்பட்ட மகப்பேறு சிகிச்சை சேவை கற்பிட்டியின் ஆரம்பிக்கப்படவுள்ளது.
கற்பிட்டி பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.ஆர்.எம். முஸம்மிலின் முயற்சியின் பலனாக கற்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி தம்மசிரியின் ஏற்பாட்டில் இம்மாதம் 17 ம் திகதி முதல் மாதாந்தம் மகப்பேறு சிகிச்சை சேவையை நடத்துவதற்கான வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேற்பார்வை மற்றும் விசேட கலந்துரையாடல் முகத்துவாரம் பாலர் பாடசாலையில் கடந்த வியாழக்கிழமை (29)அன்று இடம்பெற்றது.
இதில் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.ஏம். முஸம்மில், கற்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி எம்.முர்ஷிதா, பொது சுகாதார பரிசோதகர் எம்.சப்ரீன், கற்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் அதிகாரிகள் உட்பட ஊர் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
எம்.யூ.எம்.சனூன்

26 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
2 hours ago