Janu / 2024 ஏப்ரல் 04 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம்- கல்லடி மீ ஓயா ஆற்றுப் பகுதியில் வைத்து நபரொருவர் மான் இறைச்சியுடன், புதன்கிழமை (03 ) காலை புத்தளம் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்லடி பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் .
இது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 15 கிலோ கிராம் மான் இறைச்சி, மான் தலை, மான்தோல், தராசு மற்றும் கத்திகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட இறைச்சி மற்றும் ஏனைய பொருட்களையும் புத்தளம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இதன்போது பதில் நீதவானாகக் கடமையாற்றிய மொஹமட் இக்பால் பிணையில் விடுவிப்பதற்கும், எதிர் வருகின்ற 30ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
எம்.யூ.எம்.சனூன்
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago