2025 மே 07, புதன்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

Janu   / 2024 ஓகஸ்ட் 08 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிராதுருகொட்ட - திவுல பெலஸ்ஸ பிரதான வீதி விராணகம பிரதேசத்தில் புதன்கிழமை (07) அன்று இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் பலத்த காயமடைந்துள்ளதாக கிராதுருகொட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கொழும்பில் பணிப்புரிந்து வந்த விராணகம பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய கே.எம்.ஜெயதிஸ்ஸ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .

குறித்த நபர் விடுமுறைக்காக மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த போது வீட்டிற்கு 1 கிலோமீட்டர் தூரத்தில் வைத்து ஏற்பட்ட தூக்க கலக்கத்தினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது .

விபத்தில் காயமடைந்த இருவரையும் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டாலும் ஒருவர் உயிரிழந்ததாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X