Janu / 2024 பெப்ரவரி 11 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம்- பல்லம நந்திமித்ர பாடசாலைக்கு அருகில் சனிக்கிழமை (10) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சிலாபம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த ரிதிபென்திஎல்ல, 2ஆம் கட்டை பகுதியை சேர்ந்த 22 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இந்த விபத்தில் பலியாகியுள்ளார்.
சிலாபம் பகுதியில் இருந்து ஆனமடுவை நோக்கிப் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதியே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளை உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் இந்த விபத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு பல்லம வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரஸீன் ரஸ்மின்
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago