Janu / 2024 ஜனவரி 18 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுரங்குளிய – விருத்தோடை பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று லொறியுடன் மோதியதில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் புதன்கிழமை (17) இரவு 09.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மதுரங்குளிய – விருதோடை பகுதியைச் சேர்ந்த கலீல் அஹமட் மெஹிதி என்ற 15 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விருதோடை முஸ்லிம் பள்ளிவாசலுக்கு அருகில் வலப்புறம் உள்ள வீதியிற்கு லொறியை திருப்ப முற்பட்ட போது குறித்த மோட்டார் சைக்கிள் அதிவேகமாக வந்து லொறியுடன் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவனை புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பில் மதுரங்குளிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இது பதிவுசெய்யப்படாத மோட்டார் சைக்கிளொன்று எனவும் விபத்து இடம்பெற்ற போதும் மோட்டார் சைக்கிளின் விளக்குகள் இயங்கிவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
16 Mar 2026
16 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Mar 2026
16 Mar 2026