2026 மார்ச் 17, செவ்வாய்க்கிழமை

வலம்புரியை விற்க முயன்றவர் கைது

Mayu   / 2023 டிசெம்பர் 06 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை நகரில் ரூ.3 கோடி பெறுமதியான அரியவகை வலம்புரிசங்கை விற்பனை செய்ய சென்ற நபரை நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதுள்ளனர்.

பதுளை பதுலுபிட்டி பிரதேசத்தை சேர்ந்த (38 வயது) ஒருவரே கைது இன்று (06) செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், குறித்த  பிரதேசத்தில் நபர் ஒருவர் மிகவும் பெறுமதியான அரியவகை வலம்புரி சங்கை இரகசியமாக விற்பனை செய்யவுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து, குறித்த நபர் நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X