Janu / 2024 மே 23 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹங்வெல்ல பிரதேசத்தில் வீசிய பலத்த காற்றினால் வீதியில் விழுந்த மரமொன்றில் , மோட்டார் சைக்கிள் மோதி அதன் சாரதி உயிரிழந்துள்ள சம்பவம் வியாழக்கிழமை (23) இடம்பெற்றுள்ளது .
ஹங்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த , இரண்டு பிள்ளைகளின் தந்தையான ,47 வயதுடைய உபுல் அநுருத்த தெஹிவல லியனகே என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
குறித்த நபர் மற்றொரு குழுவினருடன் வெசாக் பண்டிகைக்கால உணவு வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்வதற்கான மின் உற்பத்திக்கான எரிபொருளை எடுத்து வந்து கொண்டிருந்த போதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது .
மேலும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
9 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
25 minute ago