Janu / 2024 மே 05 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சிகரட்டுகளை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற நபர் ஒருவர் புத்தளம் பிராந்திய போக்குவரத்து பொலிஸாரினால் வெள்ளிக்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளார்.
போக்குவரத்து பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய பாலாவி பகுதியில் வைத்து சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனைக்கு உற்படுத்திய போதே 40 பெட்டிகளில் அடைக்கப்பட்ட 800 வெளிநாட்டு சிகரட்டுகள் சிகரட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரட்கள் மற்றும் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் மேலதிக நடவடிக்கைகளுக்காக புத்தளம் தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புத்தளம் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ரஸீன் ரஸ்மின்

5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago