2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கூத்துப் போட்டி 2013

Menaka Mookandi   / 2013 ஜூலை 05 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன், மாணிக்கப்போடி சசிகுமார்


கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்திய கூத்துப் போட்டி 2013 இன்று மட்டக்களப்பு பயனியர் வீதி அருகில் திறந்த வெளியில் இடம்பெற்றது.

இதில் வடமோடிக்கூத்து, தென்மோடிக்கூத்து, சந்து நடைக் கூத்து, வசந்தன் கூத்து, பறைமேளக் கூத்து என்பன இடம்பெற்றன. இப்போட்டியில் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கலை, இலக்கிய, நாடக மன்றங்கள் பங்குபற்றின.

மாவட்ட மட்டத்தில் முதலாம் இடம்பெறும் கூத்துக் கலைஞர்கள் மாகாண மட்டத்தில் போட்டியிடவுள்ளார்கள். மாகாண மட்டப்போட்டியில் 01ஆம், 02ஆம், 03ஆம், இடங்களைப்பெறும் கூத்குக்களுக்கு விருதுகள், பணப்பரிசில்கள், சான்றிதழ்கள் என்பன வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .