2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சொற்சிலம்பம் 2013

Kogilavani   / 2013 மார்ச் 30 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கைத் தமிழ் விவாதிகள் கழகத்தின் அங்குராட்பண நிகழ்வான 'சொற்சிலம்பம் 2013' எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் உலக அறிவிப்பாளர் டீ.ர்.அப்துல் ஹமீத் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார்.

இலங்கையில் தமிழ் விவாதத்தை வளர்ப்பதற்கும் பாடசாலை மட்டத்தில் மாணவர்களிடையே விவாதம் செய்வதற்கான ஆர்வத்தைத் தூண்டவும் விவாதத்தின் மூலம் ஆரோக்கியமான கருத்துப் பரிமாறலுக்கான சூழலை உருவாக்கவும் ஆகிய நோக்குகளை அடிப்படையாயக் கொண்டு பாடசாலைகளில் விவாதப் போட்டிகளில் பங்குபற்றிய முன்னாள் விவாதிகளால் உருவாக்கப்பட்டதே இலங்கைத் தமிழ் விவாதிகள் கழகமாகும்.

இக் கழகத்தின் முதல் நிகழ்வான 'சொற்சிலம்பம் 2013' இல் விவாதத்தின் வகைகளை மக்களிடம் கொண்டு செல்லும் முகமாக நாடாளுமன்ற விவாதம், பாரம்பரிய விவாதம் மற்றும் சுழலும் சொற்போர் என்பன இடம்பெற இருக்கின்றன.

'இவ்வவை குரங்கு கையில் பூமாலை கொடுப்பதைத் தடை செய்யும்' என்ற தலைப்பிலான நாடாளுமன்ற விவாத்திற்கு குமாரவடிவேல் குருபரன் தலைமை வகிக்க அரச தரப்பில் பவித்திரா வரவேஸ்வரன், இரவீந்திரன் அருணோதயன் மற்றும் இராஜன் பூபாலசிங்கம் இந்துஷன் ஆகியோரும் எதிர்த் தரப்பில் தவேந்திரன் கபிலன், துஷாந்திகா குமாரசூரியர் மற்றும் அபிலேஷா சேகர் ஆகியோரும் வாதம் புரிவர்.

சுந்தரலிங்கம் முகுந்தன் தலைமையேற்கும் சுழலும் சொற்போhர் 'தமிழ் மக்கள் அதிகம் நம்பி ஏமாந்தது' என்ற தலைப்பில் இடம்பெறும்.

இதில் 'இந்தியாவை' என்று லோகேந்திரன் பிரசன்னவரூன், 'தமிழ்க் கூட்டமைப்பை' என்று பொன்னுத்துரை கோபிநாத், 'புலம்பெயர் தமிழர்களை' என்று செல்வராஜா மதுரகன், 'தமிழகத்தை' என்று முரளீதரன் மயூரன், 'மேற்குலகை' என்று தெய்வேந்திரன் ஞாலசீர்த்தி மீநிலங்கோ மற்றும் 'ஐ.நாவை' என்று நல்லையா குமரகுருபரன் அஷோக்பரன ஆகியோர் சொற்போர் புரிவர்.

சொற்சிலம்பம் 2013 இன் இறுதி நிகழ்வான பாரம்பரிய விவாதமானது 'கிருஷ்ணரை விட சகுனியே சிறந்த சாணக்கியன்' என்ற தலைப்பில் இடம்பெறும்.

இதற்கு தனபாலசுந்தரம் தமிழழகன் தலைமை வகிப்பார். இதில் வாதிகளாக சேகு இஸ்ஸடீன் அஸ்ஸியான், வித்யா காண்டீபன், இராஜேந்திரன் கோகுல்நாத், விமலநாதன் விமலாதித்தன் ஆகியோரும் பிரதிவாதிகளாக பாலேந்திரன் காண்டீபன், ஆரணி ஸ்ரீனிவாசன், செல்வராஜா தனராஜ், தியாகராஜா சுகந்தன் ஆகியோரும் பங்குபற்றுவர்.

இலங்கைத் தமிழ் விவாதிகள் கழகமானது கொழும்பில் தமிழ் விவாதத்தை வளர்த்தவர்களுக்கான கௌரவத்தை த. இராஜரட்ணம், மா. கணபதிப்பிள்ளை, செல்வி. ஸ்ரீகுமாரி கதிரித்தம்பி, க.கலாகரன், க. க. உதயகுமார், சோ. முரளி ஆகியோருக்கு வழங்குகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .