Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Kogilavani / 2012 பெப்ரவரி 02 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(க.கோகிலவாணி)
சைவ மங்கையர் கழகத்தின் 82 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 'சக்தியின் சக்தி' நிகழ்வு எதிர்வரும் 24, 25 ஆம் திகதிகளில் கொழும்பு கதிரேசன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வுக் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இங்கு உரையாற்றிய சைவ மங்கையர் கழக தலைவியும் சைவ மங்கையர் கழக முகாமையாளருமான சிவாநந்தினி துரைசாமி தெரிவிக்கையில்,
"இலங்கையில் யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட நிலையில் இடம்பெயர்ந்து வாழும் சிறுவர்களில் சிலரை தெரிவு செய்து அவர்களுக்கு கல்வி முதல் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக்கொடுக்கும் செயற்பாட்டை சைவ மங்கையர் கழகம் முன்னெடுத்து வருகின்றது. இதனடிப்படையில் அச்சிறார்கள் கல்வி பயில வேண்டிய வகுப்புகளில் கற்றல் செயற்பாட்டை தொடர செய்வதுடன் அவர்களுக்கு போசாக்கான உணவு, உடைகள், மருத்துவம், தங்குமிட வசதிகள் போன்ற உதவிகளையும் வழங்கி வருகின்றது.
இதேவேளை, இச்சிறுவர்களுக்கான கற்றல் செயற்பாடாக ஆங்கில கல்வி, கணினியறிவு, கணித நிகழ்வுகள் என்பவற்றையும் வழங்கி வருகின்றோம். எங்களுக்கு இந்தசெயற்பாடுகளுக்கு சில தனியார் நிறுவனங்கள் வருடந்தோறும் உதவிகளை அவ்வப்போது வழங்கி வருகின்றன.
எமது பாடசாலை தனியார் பாடசாலையென்பதால் இவ்வாறான செயற்பாடுகளை தொடர்வதற்கு நிதியென்பது பற்றாக்குறையாக காணப்படுக்கின்றது. எனவே இச்சிறுவர்களுக்கு உதவுவதற்காக நிதி திரட்டும் நோக்கில் இந்த 'சக்தியின் சக்தி' நடன நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்தியாவின் “விபா“ அமைப்பினர் சைவ மங்கையர்கழகத்துடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளை வழங்கவுள்ளனர்.
இந்நிகழ்வின்போது இசை, நடனம், ஆடை அணிவகுப்புகள் என்பன இடம்பெறவுள்ளன. இந்நிகழ்வுகளில் இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பல கலைஞர்கள் பங்குபெறவுள்ளனர். பிரபல திரைப்பட நடிகையான பூஜா இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கலந்துகொள்ளவுள்ளார்.
இந்நிகழ்விற்கான நிதியனுசரணையாக லிட்டில் ஏசியா நிறுவனம் மற்றும் இந்நிகழ்வில் ஆடை அணிவகுப்பில் பங்குபற்றும் கலைஞர்களுக்கான சாறிகள் என்பவற்றை இந்தியாவின் பிரபல ஆடை கடையான போத்திஸ் வழங்குவதுடன் ஐ.டி.எம். இந்நிகழ்வுக்கான நிதி உதவிகளை செய்கின்றன" ' என்றார்.
இவ்வூடகவியலாளர் சந்திப்பில் இந்தியாவின் விபா அமைப்பின் உறுப்பினர்கள், சைவ மங்கையர் கழக அங்கத்துவர்கள், சைவ மங்கையர் பாடசாலை அதிபர், உப அதிபர், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். (படங்கள் : வருண வன்னியாராச்சி)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
30 Apr 2025
30 Apr 2025