Sudharshini / 2015 செப்டெம்பர் 06 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாகித்திய விருது விழா எதிர்வரும் 10 ஆம் திகதி, மாலை 3.00 மணிக்கு இலங்கை மன்ற கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
கடந்த ஆண்டு மும்மொழிகளிலும் வெளிவந்த நாவல், சிறுகதை, கவிதை, சிறுவர் இலக்கியம், இளைஞர் இலக்கியம், சிங்கள-தமிழ் மொழிபெயர்ப்பு நூல்களில் சிறந்த நூல்கள் தெரிவுச் செய்யப்பட்டு பணப் பரிசில்களும் விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.
இவ்விழாவில் கலாநிதி ஹரிஸ்சந்திர விஜயதுங்க சிறப்பு அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்நிகழ்வில், சிறப்புரையை பேராசிரியர் தயா அமரசேகரவும் (சிங்களத்தில்) தில்லை நடராஜாவும் (தமிழில்) ஆற்றவுள்ளனர்.
இதேவேளை, மும்மொழிகளிளும் நீண்ட காலமாக இலக்கியப் பணி ஆற்றிய மூவருக்கு கொடகே வாழ்நாள்; சாகித்திய விருது வழங்கப்படவுள்ளது.
இவ்விழாவில், நீண்டகாலமாக மூன்று மொழிகளிலும் இலக்கியப் பணி ஆற்றிய சந்ததஸ் கோபர ஹேவா, நந்தினி சேவியர்;, திருமதி விஜிதா பெர்ணான்டோ ஆகியோர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .