Niroshini / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் பேரவையின் ஏற்பாட்டில் புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு 'தியாகத் திருநாள்' மாபெரும் கவியரங்கு நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (25) பிற்பகல் 03.00 மணிக்கு பாலமுனை அல் ஹிதாயா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.
அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் பேரவையின் தலைவர் கலாபூஷணம் மாறன் யூ செயின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், அக்கரைப்பற்று அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். காஸிம் பிரதம அதிதியாகவும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் பத்வாக் குழுவின் செயலாளர் ஐ.எல்.எம். ஹாஸிம் சூரி மதனி கௌரவ அதிதியாகவும் அம்பாறை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஐ.எல். தௌபீக் விசேட அதிதியகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன்போது, கலாபூஷணம் ஆசுகவி அன்புடீன், கலாபூஷணம் ஏ.எல். இஸமாலெவ்வை, கலாபூஷணம் கே.எம்.ஏ அஸீஸ், கலாமணி மக்கின் ஹாஜி, கவிஞர் விஜிலி, கவிஞர் ரியாஸ் குராணா, கலாரத்தின சுல்பிகா ஷெரீப், கவிதாயினி பர்ஸானா றியாஸ் ஆகியோர் கவிதை வழங்கவுள்ளனர்.
இதேவேளை, கவிஞர்களான பாலமுனை முஹா, கலைப்பிறை ஜே. வஹாப்தீன், எழுகவி எம்.யூ.எம். ஜெலீல், பாலமுனை முபீத், வாழைச்சேனை றம்சியா ஆகியோர் கவிப் பொழிவு நிகழ்த்தவுள்ளனர்.
18 minute ago
22 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
22 minute ago
2 hours ago