2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கொழும்பில் ஈரானிய திரைப்படங்கள்

Super User   / 2011 டிசெம்பர் 13 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலக புகழ் பெற்ற ஈரான் இஸ்லாமியக் குடியரசின் திரைப்படங்களை கொழும்பில் திரையிடும் நடவடிக்கை அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த ஆரம்ப நிகழ்வில் இலங்கைக்கான ஈரான் தூதுவர் கலாநிதி நபி மொஹமட் ஹஸனி போரி, கலாசார கவுன்ஸிலர் மெஹ்தி ஜே ரொக்னி, பிரபல சிங்கள திரைப்பட நடிகைகளான சிரியானி அமரசேன மற்றும் மெனிக் குருகுலசூரிய உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த திரைப்படங்கள் ஓவ்வொரு மாதமும் முதலாம் மற்றும் இறுதி புதன்கிழமைகளில் இலக்கம் 06 சேர் ஏர்னஸ்ட் டி சில்வா மாவத்தையில் உள்ள ஈரான் தூதுவராலயத்தின் கலாசார பிரிவின் கேட்போர் கூடத்தில் ஒளிபரப்பப்படுகின்றது.

ஆங்கில உப தலைப்புக்களுடன் காண்பிக்கப்படும் இத்திரைப்படங்களுக்கான அனுமதி முற்றிலும் இலவசமாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .