Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Kogilavani / 2012 ஜனவரி 23 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சி.குருநாதன்)
திருகோணமலை திரைக்கலை முன்னோடி அமரர் த.சித்தி அமரசிங்கத்தின் ஐந்தாவது ஆண்டு நினைவு தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை திருகோணமலை நகரமண்டபத்தில் நான்கு குறும்படங்கள் வெளயிடப்பட்டதுடன் சித்தி அமரசிங்கம் பற்றிய ஆவணப் படக்காட்சியும் காணப்பிக்கப்பட்டது.
திருகோணமலை, கிரியேஷன்ஸ் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் வரவேற்புரையை ச.சத்தியதேவன், தொடக்க உரையை ஓய்வு பெற்ற அதிபர் திருகோணமலை நவம், நினைவுரையை இலங்கை வங்கியின் கிழக்கு மாகாண சந்தைப்படுத்தல் முகாமையாளர் என்.ரி.ரகுராம் ஆகியோர் ஆற்றினர்.
இதேவேளை, 'சமூகம் ஊடாக குறும்படங்கள்' என்ற தலைப்பில் சிரேஷ்ட விரிவுரையாளர் டாக்டர் எஸ்.ரகுராம், 'திருகோணமலையில் குறும்படங்களும் நிறுவனப்படுத்தலின் முக்கியத்துவமும்' என்ற தலைப்பில் குறும்பட இயக்குநர் ஜே.பி.ஜே. ஆனந்தரமணன் மற்றும் அனோமா ராஜகருணா ஆகியோர் உரையாற்றினர்.
இந்நிகழ்வில் சிலுவைகள் சிறகுகள், அவன் பேசமாட்டான், மண்சோறு, நைப்ஸ் ஆகிய குறும்படங்கள் திரையிடப்பட்டன. திருகோணமலையில் குறும்படங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இளம் இயக்குநர்கள் சபையோருக்கு அறிமுகம்செய்து வைக்கப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
3 hours ago