2025 மே 01, வியாழக்கிழமை

அமரர் பாலகப்போடி அண்ணாவியாரின் ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கூத்துகள் மேடையேற்றம்

Kogilavani   / 2012 ஜனவரி 23 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)
தமிழரின் பாரம்பரிய கலையான கூத்துக் கலையின் வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பு வழங்கிய  கலாவித்தகர், கலாபூஷணம் சி.பாலகப்போடி அண்ணாவியாரின் ஓராண்டு நினைவு தினம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு கண்ணன்குடாவில் அனுஷ்டிக்கப்பட்டதுடன் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையால் அவரது வாழ்க்கை சரித்திரம் ஆய்வு நூலும் வெளியிடப்பட்டது.

 கண்ணன்குடா மகாவித்தியாலத்தில் கண்ணகி முத்தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் தலைவர் க.விமலநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அண்ணாவியாரால் இறுதியாக அரங்கேற்றப்பட்ட வாளவீமன் நாடகம், அவரால் கண்ணன்குடா மகாவித்தியால மாணவர்களுக்குப் பழக்கப்பட்ட வசந்தன் கூத்து என்பனவும் மேடையேற்றப்பட்டன.

இதன்போது கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையினரால் அவரது உருவம்  பொறிக்கப்பட்ட அலங்கார வளைவு வெளியிட்டு முத்தமிழ் மன்றத்திற்கு கையழிக்கப்பட்டதுடன் பல்கலைக்கழகத்தால் வரையப்பட்ட அவரது உருவப் படம் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேவேளை, அண்ணாவியாரது வாழ்க்கைச் சரித்திர ஆய்வு நூலும் பல்கலைக்கழக நுண்கலைத் துறையால் வெளியிடப்பட்டது.

நினைவுதின நிகழ்வில் பேராசிரியர் சி.மௌனகுரு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சின் இணைப்பாளருமாகிய செல்வி க.தங்கேஸ்வரி, கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறைத் தலைவர் ஜெயசங்கர், விரிவுரையாளர் ரவிச்சந்திரன், முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எதிர்மன்னசிங்கம், செங்கதிர் ஆசிரியர் செங்கதிரோன் கோபாலகிருஷ்ணன், விபுலம் வெளியீட்டு தலைவர் க.ஆறுமுகம், கோட்டக்கல்விப் பணிப்பாளர் சு.முருகேசப்பிள்ளை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .