Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Kogilavani / 2012 ஜனவரி 30 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு ஆத்மராஜா றூத் சந்திரிக்கா எழுதிய 'வலி சுமந்த மானுடம்' சிறுகதைத் தொகுதி வெளியீடு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பெரியகல்லாறு மெதடிஸ்த சமூக மண்டபத்தில் நடைபெற்றது.
ஓய்வுபெற்று உதவி அரசாங்க அதிபரும் எழுத்தாளருமான அன்புமணி இரா.நாகலிங்கம் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில், மானிட தற்சார்பு தியான ஆசிரம ஸ்தாபகர் வண.பொன்.ஆனந்தராஜாவும், தாழங்குடா தேசிய கல்விக் கல்லூரி பீடாதிபதி எஸ். பாக்கியராஜா, வை.எம்.சீ.ஏ.யின் தலைவர் பெலிசியன் பிரான்சிஸ், அருட்சகோதரர் கலாநிதி எஸ்.ஏ.ஐ.மத்தியு ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, எழுத்தாளரும் ஊடகவியலாளருமான கே.ரவீந்திரன் வரவேற்புரையினை நிகழ்த்தியதுடன் எழுத்தாளர் அரசரெட்ணம், நவாஸ் சௌபி ஆகியோர் நூல் அறிமுக உரையினையும், நூல் ஆய்வுரையிரையினை செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணனும் நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில் எழுத்தாளர் கவிஞர் வேலாயுதபிள்ளை, வண.பொன்.ஆனந்தராஜா, அருட்சகோதரர் கலாநிதி எஸ்.ஏ.ஐ.மத்தியு ஆகியோருடன் நூலாசிரியரும் கௌரவிக்கப்பட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago