2025 மே 01, வியாழக்கிழமை

கிண்ணியா அமீர் அலியின் 'மனையாளும் மறுபதிப்பும்' கவிதை நூல் வெளியீட்டு

Super User   / 2012 மார்ச் 18 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா அமீர் அலி எழுதிய 'மனையாளும் மறுபதிப்பும்' எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தமிழ் சங்கத்தில் நடைபெற்றது.

ஞாயிறு தினக்குரல் ஆசிரியர் பாரதியின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கவிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியவாதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இலக்கிய துறையில் மூன்று தசாப்த அனுபவம் கொண்ட கிண்ணியா அமீர் அலியின் முதலாவது கவிதை தொகுதி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் எழுத்தாளர்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் நூல் பதிப்பில் கரம் கொடுக்கும் புரவலர் புத்தக பூங்காவின் 28 ஆவது வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .