2025 மே 01, வியாழக்கிழமை

யாழ்.கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வு

Kogilavani   / 2012 மார்ச் 19 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(கவிசுகி)

யாழ்ப்பாண கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் ரி.பி. ஏக்கநாயக்கவினால் யாழ்.கலைஞர்கள் ஊக்குவிப்பு தொகைகளும் சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின், யாழ்.மாவட்ட செயலளர் திருமதி இமெல்டா சுகுமார், கலை கலாசார அமைச்சின் உயர் அதிகாரிகள், யாழ்.கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, உரையாற்றிய யாழ். மாவட்டச் செயலாளர் திருமதி இமெல்டா சுகுமார,;

யாழ்ப்பாணம் கலைஞர்கள் வாழ்கின்ற புனிதமான இடம். இங்கு கலாசர சீரழிவுகள் நடைபெற அனுமதிக்க முடியாது.

இலக்கிய வாதிகள் தான் சார்ந்த சமூகத்தை சமூக விழுமியங்களோடு கட்டியெழுப்ப வேண்டும். எமது சமூகம் சீரழியவில்லை என்பதை உலகிற்கு பறைசாரற்ற வேண்டும்

எமது மாவட்டத்தின் கலாசாரம், பண்பாடுதான் எம்மை தலைநிமிரச் செய்கிறது. யாழ்.மாவட்டத்தின் கலைப் பொக்கிஷங்கள் கடந்த கால யுத்ததின் போது அழிக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றை மீண்டும் உருவாக்குவதற்கு கலைஞர்களினால் மட்டுமே முடியும்.

எமது கலை, கலாசார பண்பாடுகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். கலைஞர்கள் தேசிய மட்டத்தில் சாதனையாளர்களாக உருவாக அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.

எமது கலை கலாசாரத்தை வளர்ப்பதில் அனைவரும் ஒன்று பட்டு செயற்படவேண்டும் என்று தெரிவித்தார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .