2025 மே 01, வியாழக்கிழமை

திருமலையில் நான்கு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு

Kogilavani   / 2012 ஏப்ரல் 09 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}



(சி.குருநாதன்)


மூத்த எழுத்தாளர் திருமதி வயலற் சரோஜா சந்திரசேகரம் எழுதிய நான்கு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை திருகோணமலை ஸ்ரீகோணேஸ்வரா இந்துக்கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது, நடைபெற்ற இந்நிகழ்வில், வாழ்க்கையை வளமாக்க வழி என்ன? என்ற தலைப்பிலான உளவளநூல் மற்றும் சாணக்கியன் என்ற சஞ்சிகையின் மூன்று இதழ்களும் வெளியிடப்பட்டன.

விக்ணேஸ்வரா மகா வித்தியாலத்தின் அதிபர் சீ.மதியழகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் வி.பி.பாலசிங்கம் முதன்மை அதிதியாகக் கலந்து கொண்டு நூல்களின் முதலாவது தொகுதியை கௌரவ அதிதியாகக் கலந்து கொண்ட திருகோணமலை நகரசபையின் உபதலைவர் சே.ஸ்ரீஸ்கந்தராசாவிற்கு வழங்கி வெளியிட்டு வைத்தார். வாழ்த்துரையை கலாபூஷணம் கேணிப்பித்தன் அருளானந்தம் வழங்கினார்.

உளவளநூல் பற்றிய அறிமுகவுரையை மூத்த தமிழ் எழுத்தாளரான கலாபூஷணம் திருமலை சுந்தாவும் சாணக்கியன் சஞ்சிகை பற்றிய அறிமுகவுரையை நீங்களும் எழுதலாம் கவிதை சஞ்சிகையின் ஆசிரியர் எஸ்.ஆர்.தனபாலசிங்கமும் நிகழ்த்தினர். நூலாசிரியர் ஏற்புரையை நிகழ்த்தினார். திருமறைக்கலா மன்ற மாணவிகளின் புஷ;பாஞ்சலி மற்றும் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .