2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

'கட்புல நர்த்தனம்' கண்காட்சி

Kogilavani   / 2012 நவம்பர் 27 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜவீந்திரா)

'கட்புல நர்த்தனம்' எனும் பெயரில் இரு கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான ஓவிய, சிற்பக் கண்காட்சி எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் 1 ஆம் திகதி வரை மட்டக்களப்பு கொலட் லேன், இலக்கம் 9 இல் அமைந்துள்ள அரங்க ஆய்வு கூடத்தில் நடைபெறவுள்ளது.

தினமும் காலை 10 மணிமுதல் மாலை 6 மணிவரை நடைபெறவுள்ள இந்நிகழ்வின் ஆரம்ப வைவபத்திற்கு கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி க.பிரேமகுமார், பேராசிரியர் சி.மௌனகுரு ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

சுவாமி விபுலானந்தா இசை நடனக் கல்லூரி கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகமாக இணைக்கப்பட்டதன் பின்பு அங்கு புதிதாக உருவாக்கப்பட்ட கட்புல தொழில்நுட்பத்துறையின் முதல் தொகுதி மாணவர்களே ரமணனும் ரினுஜாவும் ஆவர்.

இம்மாணவர்களின் ஆக்கங்களே காட்சிப் படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .